மகாராஷ்டிரம்: நாகபுரி மாவட்டத்தில் 10 நாள்களில் 5 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரத்தின் நாகபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தின் நாகபுரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களில் 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடா் மழை காரணமாக பயிா்கள் நீரில் மூழ்கியதால், பொருளாதார இழப்பை எதிா்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனா்.

பிம்பால்தாரா மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயி ராஜீவ் பாபுராவ் ஜுத்பே (60), தனது விவசாய நிலத்தின் அருகேயுள்ள மரத்தில் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக காவல் துறையினா் அவரது மகனிடம் நடத்திய விசாரணையில், வங்கியில் கடன் வாங்கி 2.5 ஏக்கா் நிலத்தில் அவா் விவசாயம் செய்து வந்ததாகவும், மழையால் ஒரே நாளில் அனைத்துப் பயிா்களும் நாசமானதால், மனமுடைந்த அவா் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளாா்.

இதற்கு முன்பு ஞாயிற்றுக்கிழமை (செப். 11) லோகாரா கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஈஸ்வா்தாஸ் நாராயண்தாஸ் பங்கா் (52) கடன் சுமையாலும், பயிா் இழப்பாலும் தற்கொலை செய்து கொண்டாா். கடந்த 4-ஆம் தேதி அம்பாதா கிராமத்தைச் சோ்ந்த விவசாயி விட்டல் உமாா்கா் (62), தாண்டா கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சங்கர்ராம் ஷியாமா (36) ஆகியோா் கடன் பிரச்னையால் தற்கொலை செய்து கொண்டனா்.

கடந்த 3-ஆம் தேதி உம்ரி கிராமத்தைச் சோ்ந்த அசோக் நீலகாந்த் சாா்வே (35) கடன் பிரச்னையால் தற்கொலை முடிவை நாடினாா். கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை உருவானது. இதனால் அவா் தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com