பிரதமர் பிறந்தநாள்: 2 வாரங்களுக்கு மெகா ரத்த தான முகாம்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி 2 வாரங்களுக்கு மெகா ரத்த தான முகாம் நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி 2 வாரங்களுக்கு மெகா ரத்ததான முகாம் நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்தநாளை வரும் 17ஆம் தேதி கொண்டாடவுள்ளார். மோடியின் பிறந்தநாளையொட்டி பல்வேறு நடவடிக்கைகளில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், மெகா ரத்ததான முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் தேசிய ரத்த தான நாளான அக்டோபர் 1ஆம் தேதி வரை முகாமை நடத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. 

ரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலியில் முன்பதிவு செய்யலாம் எனவும் சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ''மனிதநேயத்திற்காக ரத்த தானம் செய்யப்படுகிறது. இந்த மெகா ரத்த தான முகாம் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ளது. ரத்த தானம் வழங்க விருப்பமுடையவர்கள் https://eraktkosh.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம். பிரதமர் பிறந்தநாளையொட்டி நடைபெறும் இந்த மெகா ரத்த தான முகாமில் பங்கேற்று ரத்தத்தை தானமாக கொடுத்து வாழ்க்கையை காப்போம் என உறுதியேற்போம்'' எனப் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com