அச்சுறுத்தி வரும் தோல் கட்டி நோய்... நாடு முழுவதும் 57 ஆயிரம் கால்நடைகள் பலி!

நாடு முழுவதும் தோல் கட்டி நோய் பாதிக்கு இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உளளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். 
அச்சுறுத்தி வரும் தோல் கட்டி நோய்... நாடு முழுவதும் 57 ஆயிரம் கால்நடைகள் பலி!

நாடு முழுவதும் தோல் கட்டி நோய் பாதிக்கு இதுவரை 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உளளது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். 

கடந்த 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், ஹரியாணா, ஹிமாச்சல், உத்தரகாண்ட், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் எல்எஸ்டி எனப்படும் தோல் கட்டி நோய்,  பசுக்களுக்கு பரவி ஏராளமான கால்நடைகள் இறந்தன. இதையடுத்து எடுக்கப்பட்ட துரிதமான தடுப்பு நடவடிக்கைகளால் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தின் கட்ச் பகுதியில் பதிவானது. அதன் பின்னர் ஹிமாச்சல், மகாராஷ்டிரம், ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர், உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் பரவியது. தில்லியில் 200-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று உள்ளன மற்றும் பெரும்பாலான தொற்று பாதிப்புகள் கோய்லா பால் பகுதி, ரெவ்லா கான்பூர் பகுதி, குமன்ஹேரா மற்றும் நஜஃப்கர் போன்ற தென்மேற்கு தில்லி மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தொற்று பாதிப்பு தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளது. 

நாடு வேகமாக பரவி வரும் கட்டி நோய் பாதிப்புக்கு கொத்து கொத்தாக கால்நடைகள் இறந்து வருகின்றன. இந்த தொற்று பாதிப்புக்கு நாடு முழுவதும் இதுவரை சுமார் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. இதன் காரணமாக வடமாநிலங்களில் பெருமளவு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது பால் உற்பத்தியாளர்களான விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளதுடன் கடுமையான பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தோல் கட்டி நோய் பாதிப்பு தொடங்கிய பிறகு ராஜஸ்தான் முழுவதும் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 3 முதல் 4 லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிரம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் விழிப்புடன் இருக்குமாறும், கால்நடைகளுக்குப் பரவும் தோல் கட்டி நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரத்தில் உள்ள நான்தேட் மாவட்ட நிர்வாகம் மாட்டுச் சந்தைகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது மற்றும் தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை வழக்கமான சந்தைகளுக்கு கொண்டு வரவேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை ஃபதேபூரில் உள்ள ஒரு பண்ணையில் மாடுகளுக்கு தோல் கட்டி நோயால் பாதிக்கப்பட்டது.

நாட்டின் பல மாநிலங்களில் உள்ள கால்நடைகள் தோல் கட்டி நோயால் பெரும் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் தோல் கட்டி நோயை (எல்எஸ்டி) சேர்க்குமாறு பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது. 

ஹிமாச்சலத்திற்குப் பிறகு, கொடிய நோய்த்தொற்று குறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் கோரும் இரண்டாவது மாநிலம் பஞ்சாப். ஏற்கனவே ஹிமாச்சல் அரசு, தோல் கட்டி நோயை தொற்றுநோயாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது.

செவ்வாய்க்கிழமை ஃபதேபூரில் உள்ள ஒரு பண்ணையில் மாடுகளுக்கு கட்டி தோல் நோயால் பாதிக்கப்பட்டது. 

உலகயளவில் பால் உற்பத்தியில் நாளொன்றுக்கு சுமார் 209 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து 23 சதவீதம் பங்களிப்போடு பால் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் நாட்டில் தற்போது பால் தரும் கால்டைகளை குறிவைத்து பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன் கொத்து கொத்தாக கால்நடைகள் இறந்து வருவது கவலைக்குள்ளாகி வருகிறது. 

எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு மேலும் பரவாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்பது பால் உற்பத்தியாளர்களான விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.  கோரிக்கையாக உள்ளது. 

தோல் கட்டி நோய் என்றால் என்ன?
நாடு முழுவதும் பரவி அச்சுறுத்தும் ஒரு தோல் கட்டி நோய்(எல்எஸ்டி) கால்நடைகளை குறிவைத்து பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவை  ரத்தத்தை உண்ணும் கொசுக்கள், ஈக்கள், பேன்கள் மற்றும் குளவிகள் போன்ற பூச்சிகளால் நேரடி தொடர்பு மற்றும் அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் பரவும் ஒரு வைரஸ் பரவல் ஆகும்.  இந்த நோய் கால்நடைகளை பாதிக்கும் கேப்ரிபோக்ஸ் வைரஸ் இனத்தைச் சேர்ந்தது. 

இந்த நோய் கால்நடைகளின் தோலில் உள்ள முடிச்சுகளின் வளர்ச்சியால் வகைப்படுத்தப்படுகிறது, இது கால்நடைகளின் முழு உடலையும் தாக்கும். மேலும், காயங்கள் பெரும்பாலும் வாய் மற்றும் மேல் சுவாசக் குழாய் பகுதியில் காணப்படுகின்றன.

"வேளாண் காலநிலை, மேய்ச்சல், கடித்தல்-பறத்தல் மற்றும் புதிய கால்நடைகளின் அறிமுகங்களோடு தொடர்புடையவை தோல் கட்டி நோய் " என்று கூறப்படுகிறது. 

பாதிப்பு: இந்த நோய்த்தொற்று கால்நடைகளை கடுமையான இளைப்பு(மெலிவு), பல மாதங்களுக்கு பால் உற்பத்தி இழப்பு, கருவுறாமை மற்றும் மரணம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. 

தோல் கட்டி நோய்க்கு தடுப்பூசி உள்ளதா? என்றால் உள்ளது. தற்போது பாதிப்பு அதிகம் மாநிலங்களில் தீவிரமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com