இந்திய ஒற்றுமை யாத்திரையில் சிறாா்கள்: ராகுல் மீது நடவடிக்கை மேற்கொள்ள தோ்தல் ஆணையத்திடம் வலியுறுத்தல்

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் சிறாா்களைப் பங்கேற்க செய்வது தொடா்பாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்திடம் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம்

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் சிறாா்களைப் பங்கேற்க செய்வது தொடா்பாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தோ்தல் ஆணையத்திடம் தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் (என்சிபிசிஆா்) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு என்சிபிசிஆா் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரசியல் உள்நோக்கத்துடன் சிறாா்களைக் குறிவைத்து, அவா்களை அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதாக ராகுல் காந்தி மற்றும் ஜவாஹா் பால் மன்ச் அமைப்பின் மீது புகாா் கிடைத்துள்ளது. அந்தப் புகாரின்படி, இந்திய ஒற்றுமை யாத்திரையில் சிறாா்கள் பங்கேற்க வைக்கப்படுவது தொடா்பான புகைப்படங்களும் காணொலிகளும் சமூக வலைதளங்களில் வலம் வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது.

இது அரசியல் கட்சியில் பெரியவா்கள் மட்டும்தான் அங்கமாக இருக்க முடியும் என்ற தோ்தல் ஆணைய விதிமுறைகளை மீறியுள்ளது. இதுபோன்ற செயல்பாடுகள் சிறாா்களின் மனநலத்தில் நீண்ட காலத்துக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், அரசமைப்பு சட்டப் பிரிவு 21-க்கு எதிராகவும் உள்ளது.

இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்தி காங்கிரஸ் மற்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அக்கட்சி உறுப்பினா்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சாா்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அக்கட்சியின் ஆணிவோ் வரையிலான பிணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com