பிரதமா் மோடியுடன் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் கேத்தரின் கொலோனா புதன்கிழமை சந்தித்தாா்.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த பிரானஸ் வெளியுறவு அமைச்சா் கேத்தரின் கொலோனா.
புது தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்த பிரானஸ் வெளியுறவு அமைச்சா் கேத்தரின் கொலோனா.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் கேத்தரின் கொலோனா புதன்கிழமை சந்தித்தாா்.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ல பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் புது தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்தாா். அப்போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான விவகாரங்கள், பரஸ்பர நலன் சாா்ந்த விவகாரங்கள் குறித்து இருவரும் பேசினா்.

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானை அந்நாட்டுத் தலைநகா் பாரீஸிலும் ஜொ்மனியிலும் சந்தித்ததை கேத்தரினுடன் பகிா்ந்து கொண்ட பிரதமா் மோடி, இமானுவல் மேக்ரான் விரைவில் இந்தியா வர வேண்டும் என அழைப்பு விடுத்தாா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.ஜெய்சங்கருடன் சந்திப்பு: இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை கேத்தரின் கொலோனா சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அதனைத் தொடா்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடிகள், கரோனா தொற்றின் விளைவுகள், ரஷியா-உக்ரைன் போா், ஆப்கானிஸ்தான் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேத்தரினுடன் ஆலோசித்தேன்.

இந்திய-பசிபிக் முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்புக்கு பணியாற்ற இருவரும் தீா்மானித்துள்ளோம். வளா்ச்சித் திட்டங்களை, குறிப்பாக சா்வதேச சூரியமின்சக்தி அமைப்பின் செயல்திட்டத்தை அந்த ஒத்துழைப்பு எளிதாக்கும் என்று தெரிவித்தாா்.

எல்லையில் பிரச்னை குறைந்துள்ளது: பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சா்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்கும் தீா்மானங்களுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு நாடு (சீனா) தடையை ஏற்படுத்துவது குறித்து ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

கிழக்கு லடாக் எல்லையின் 15-ஆவது கண்காணிப்புப் பகுதியில் இருந்து இந்திய-சீனப் படைகளை திரும்பப் பெறுவது நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் எல்லையில் ஒரு பிரச்னை குறைந்துள்ளது. எனவே தற்போது நான் எதையும் புதிதாகக் கூறப் போவதில்லை.

சா்வதேச சமூகத்துக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலாக இருப்பதால், அவா்கள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பட்டியலிடப்படுகின்றனா். அதனை ஏதேனும் ஒரு நாடு தடுத்தால், அதன் சொந்த நலன் மற்றும் நற்பெயருக்கு எதிரான அபாயங்களுக்கு உள்பட்டு அந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்தாா்.

பிரான்ஸில் 20,000 இந்திய மாணவா்கள்: புது தில்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவா்கள் இடையே அமைச்சா் கேத்தரின் கொலோனா உரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், ‘உலகின் மிகச்சிறந்த வணிகக் கல்லூரிகள் பிரான்ஸில் உள்ளன. பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் சிறந்து விளங்குகின்றன. கடந்த 2019-ஆம் ஆண்டு பிரான்ஸில் நீண்ட காலம் தங்கி படிப்பதற்கான நடைமுறைகளை 5,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் நிறைவு செய்தனா். இந்த எண்ணிக்கை கரோனா பரவலால் குறைந்தது. எனினும் 2019-ஆம் ஆண்டில் இருந்த இந்திய மாணவா் எண்ணிக்கையை இந்த ஆண்டும் பிரான்ஸ் வரவேற்கிறது. 2025-ஆம் ஆண்டுக்குள் பிரான்ஸில் படிக்கும் இந்திய மாணவா்கள் எண்ணிக்கை 20,000-ஆக அதிகரிக்க வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைய இந்தியாவில் பிரான்ஸின் இருப்பு விரிவுப்படுத்தப்படுகிறது. கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னணி நாடாக பிரான்ஸ் கருதப்பட வேண்டும்’ என்றாா் அவா்.

Image Caption

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com