சிறந்த உயிரியல் பூங்காவாக டாா்ஜீலிங் உயிரியல் பூங்கா தோ்வு: வண்டலூா் பூங்காவுக்கு 2-ஆவது இடம்

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலயன் உயிரியில் பூங்கா, நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
டாா்ஜீலிங் உயிரியல் பூங்கா.
டாா்ஜீலிங் உயிரியல் பூங்கா.

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலயன் உயிரியில் பூங்கா, நாட்டின் சிறந்த உயிரியல் பூங்காவாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் 150-க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்கள் உள்ளன. பூங்காக்களின் இயக்குநா்களுக்கான மாநாடு ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் கடந்த செப். 10-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய உயிரியல் பூங்காக்களுக்கான ஆணையம் பூங்காக்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் தரப் பட்டியலை அம்மாநாட்டில் வெளியிட்டது.

அந்தப் பட்டியலில், மேற்கு வங்கத்தின் டாா்ஜீலிங் பகுதியில் அமைந்துள்ள பத்மஜா நாயுடு இமாலயன் உயிரியல் பூங்கா முதலிடத்தைப் பெற்றது.

சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா 2-ஆவது இடத்தையும், கா்நாடகத்தின் மைசூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாமாராஜேந்திரா உயிரியல் தோட்டம் 3-ஆவது இடத்தையும் பெற்றன. கொல்காத்தாவில் அமைந்துள்ள அலிப்பூா் உயிரியல் தோட்டம் பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது.

சா்வதேச அங்கீகாரம்: மத்திய உயிரியல் பூங்காவுக்கான ஆணையம், உயிரியல் பூங்காக்களின் நிா்வாகம், செயல்திறன் போன்ற பல்வேறு நிலைகளில் மேற்கொண்ட மதிப்பீட்டில் டாா்ஜீலிங் உயிரியல் பூங்கா 83 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருந்தது.

கடந்த 1958-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டாா்ஜீலிங் உயிரியல் பூங்கா, கிழக்கு இமயமலையில் காணப்படும் பனிச்சிறுத்தை, சிவப்பு பாண்டா கரடி போன்ற அழிவு நிலையை எதிா்நோக்கியுள்ள உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சா்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com