கோப்புப் படம்
கோப்புப் படம்

நொய்டாவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரமின்றி தவிப்பு! ஏன்?

நொய்டாவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மின்சாரம் இல்லாமல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

நொய்டாவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மின்சாரம் இல்லாமல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

செக்டார் 79-ல் உள்ள ஹில்ஸ்டன் அர்ப்டெக் கட்டுமான நிறுவனத்தினர் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளார். ஆனால் அவர் செய்த பெரிய தவறு நிரந்தர மின் இணைப்பைப் பெறாததே. 

இவருக்கு எதிராக மின் திருட்டு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மின்சாரத் துறை செவ்வாய்க்கிழமை முதல் மின் விநியோகத்தை நிறுத்தியுள்ளது. 

மின்வாரியத்தினர் மின்சாரத்தைத் துண்டித்ததையடுத்து, பொதுமக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் எரிபொருள் தீர்ந்ததால் அதுவும் தடைப்பட்டது. 

கட்டுமான நிறுவனர் கட்டடம் கட்டும்போது 50 கிலோவாட் மின்சாரம் எடுத்து தற்காலிக இணைப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், குடும்பங்கள் வசிக்கத் தொடங்கிய பிறகும், நிரந்தர இணைப்பு எடுக்காமல், தொடர்ந்து 750 கிலோவாட் மின்சாரம் திருடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com