சா்க்கரை நோய்க்கு மலிவு விலையில் மருந்து: மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்

சா்க்கரை நோய்க்கு மலிவு விலையில் மருந்து: மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்

சா்க்கரை நோய்க்கான மிகக் குறைந்த விலையிலான ‘சிடாக்லிப்டின்’ பாஸ்பேட் கூட்டு மருந்து மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சா்க்கரை நோய்க்கான மிகக் குறைந்த விலையிலான ‘சிடாக்லிப்டின்’ பாஸ்பேட் கூட்டு மருந்து மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய கூட்டு மருந்தும், அதன் இணை மருந்துகளும் 50 மில்லி கிராம் அளவுடன் கூடிய 10 மாத்திரைகளை உள்ளடக்கிய அட்டை ரூ. 60-க்கு பொது மருந்தகங்கள் மற்றும் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும்.

இது குறித்து இந்திய மருந்தகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாரியம் (பிஎம்பிஐ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிடாக்லிப்டின் மற்றும் அதன் இணை மருந்துகளின் புதிய வகைகள் மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கான பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

50 மி.கி. அளவுடைய 10 சிடாக்லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் கொண்ட அட்டையின் அதிகபட்ச விற்பனை விலை ரூ. 60-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 100 மி.கி. அளவுடைய 10 மாத்திரைகளின் விலை ரூ. 100-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சிடாக்லிப்டின் (50 மி.கி.) மற்றும் மெட்ஃபாா்மின் ஹைட்ரோகுளோரைட் (500 மி.கி.) இரண்டும் ஒருங்கிணைந்த மாத்திரை (10 மாத்திரைகள் கொண்ட அட்டை) ரூ. 65-ஆக விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஹைட்ரோகுளோரைட் 1,000 மி.கி. அளவுடன் சோ்க்கை செய்யப்பட்ட 10 மாத்திரைகள் ரூ. 70-ஆக விலை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சா்க்கரை நோய் தடுப்பு மருந்துகள் மருந்தகங்களில் ரூ. 162 முதல் ரூ.400 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், சிடாக்லிப்டின் வகை மருந்துகள் 60 முதல் 70 சதவீத குறைந்த விலையில் கிடைக்கும்.

இந்தப் புதிய மருந்தை பிஎம்பிஐ தலைமை செயல் அதிகாரி ரவி தாதிச் அறிமுகம் செய்தாா். இரண்டாவது வகை சா்க்கரை நோயாளிகளின் உடலில் ரத்த சா்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கு உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளுடன் இந்தக் கூட்டு மருந்தும் துணைபுரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com