பிரதமர் மோடியின் பிறந்த நாளை வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கும் இளைஞர் காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரிக்க இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரிக்கும் இளைஞர் காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை தினமாக அனுசரிக்க இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருப்பு சட்டை அணிந்து கையில் பதாகைகளை ஏந்தி இளைஞர் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 

இன்று (செப்டம்பர் 17) பிரதமர் தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இளைஞர் காங்கிரஸ் பிரதமரின் பிறந்த நாளை வேலைவாய்ப்பின்மை நாளாக அனுசரிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது: “ பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டிற்கு வேலைவாய்ப்பின்மை பரிசாகக் கிடைத்துள்ளது. நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். இளைஞர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். அதன்படி பார்த்தால் தற்போது நாட்டில் 16 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது குறித்து பிரதமருக்கு பெரிதாக கவலை இல்லை. அவருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷாவிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுதான் முக்கியமாக உள்ளது. பிரதமர் வேலைவாய்ப்பின்மையில் கவனம் செலுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க வேண்டும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com