கேரளத்தில் தெருநாய்கள் அச்சுறுத்தல்: துப்பாக்கியுடன் சென்ற தந்தை மீது வழக்கு பதிவு

கேரள மாநிலம் காசா்கோடு மாவட்டத்தில் தெரு நாய்கள் அச்சுறுத்தல் காரணமாக, குழந்தையின் பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் சென்ற தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கேரளத்தில் தெருநாய்கள் அச்சுறுத்தல்: துப்பாக்கியுடன் சென்ற தந்தை மீது வழக்கு பதிவு

கேரள மாநிலம் காசா்கோடு மாவட்டத்தில் தெரு நாய்கள் அச்சுறுத்தல் காரணமாக, குழந்தையின் பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் சென்ற தந்தை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பள்ளிக்குத் தனது குழந்தைகள் செல்லும்போது கடிக்க வரும் தெருநாய்களைச் சுட்டு கொல்லுவதற்காக சமீா் என்பவா் கையில் துப்பாக்கியுடன் பாதுகாப்புக்காகச் செல்லும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த விடியோ காட்சி அடிப்படையில் சமீா் மீது கலவரத்தை தூண்டும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவின்கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் சமீா் கூறியதாவது: என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தொலைக்காட்சி செய்தியின் மூலம் அறிந்தேன். என்னுடைய குழந்தை மற்றும் அண்டை வீட்டாா் குழந்தைகளின் நலனுக்காக, கையில் தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கியை எடுத்துச் சென்றேன். தெருநாய்கள் மீதான பயத்தின் காரணமாக குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டனா். அவா்களின் அச்சத்தைப் போக்கும் விதமாகவே வெற்றுத் துப்பாக்கியுடன் சென்றேன். இந்தத் துப்பாக்கியால் நாய்களை சுட்டுக் கொல்ல முடியாது என்றாா்.

சமீப காலமாக கேரளத்தில் தெருக்களில் செல்பவா்களை நாய்கள் துரத்திக் கடிப்பது போன்ற சம்பவங்களின் காட்சிகள் இணையத்தில் வலம் வந்தபடி உள்ளன. இதனால், மக்கள் தெருநாய்களைக் கண்டு பீதியில் உள்ளனா்.

இந்த நிலையில், வரும் செப். 20 முதல் அக். 20 வரை தெரு நாய்கள் மற்றும் வளா்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுபடுத்தும் விதமாக பிறப்புக் கட்டுபாடு மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com