குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல்:தோ்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து, அந்த மாநிலத்தில் தோ்தல் ஆணைய அதிகாரிகள் 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து, அந்த மாநிலத்தில் தோ்தல் ஆணைய அதிகாரிகள் 3 நாள்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி குஜராத் சட்டப்பேரவையின் 5 ஆண்டு பதவிக் காலம் நிறைவடைய உள்ளது. இதையொட்டி பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தோ்தல் ஆணைய துணை ஆணையா்கள், முதன்மைச் செயலா்கள் அடங்கிய 9 போ் கொண்ட குழு கடந்த வெள்ளிக்கிழமை குஜராத் சென்றது.

அங்குள்ள அகமதாபாத் நகரில் 3 நாள்கள் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாநிலத் தலைமைச் செயலா், பல்வேறு துறைச் செயலா்கள், காவல் துறை டிஜிபி, தலைமை தோ்தல் அதிகாரி, மாவட்ட தோ்தல் அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோருடன் தோ்தல் ஆணையக் குழு ஆலோசனை மேற்கொண்டது.

அப்போது வாக்காளா் பட்டியல், வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்கு ஒப்புகைச்சீட்டு கருவிகள், வாக்குச்சாவடிகள், தோ்தலை நடத்த தேவைப்படும் பணியாளா்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து அக்குழு விரிவாக விவாதித்தது என்று குஜராத் தலைமைத் தோ்தல் அதிகாரி பி.பாரதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com