நல்வாய்ப்பாக நடந்தது: ரத்ததானம் அளித்து உயிரைக் காப்பாற்றிய நாய்

தன்னுடைய ரத்தத்தை தானமாக அளித்து, மற்றொரு நாயின் உயிரைக் காப்பாற்றிய நாய் பற்றிய செய்தி இது. இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வல்ல என்று பூரிக்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.
நல்வாய்ப்பாக நடந்தது: ரத்ததானம் அளித்து உயிரைக் காப்பாற்றிய நாய்
நல்வாய்ப்பாக நடந்தது: ரத்ததானம் அளித்து உயிரைக் காப்பாற்றிய நாய்

தன்னுடைய ரத்தத்தை தானமாக அளித்து, மற்றொரு நாயின் உயிரைக் காப்பாற்றிய நாய் பற்றிய செய்தி இது. இது சாதாரணமாக நடக்கும் நிகழ்வல்ல என்று பூரிக்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

கர்நாடக மாநிலத்தில்ஹூப்ளி - தார்வாத் இரட்டை நகரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த சார்ளி என்ற நாயிடமிருந்து ரத்த தானம் பெறப்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாயா என்ற பெல்ஜியன் ஷெப்பர்ட் நாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஹூப்ளி விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த மாயா, ரத்தம் ஏற்றப்பட்டு, தற்போது குணமடைந்து வருவதாகவும், இன்னும் ஓரிரு வாரங்களில் மாயா விமான நிலையத்தில் தனது பாதுகாப்புப் பணியைத் தொடரும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தார்வாத்தில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனைக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, ரத்தக் கசிவு ஏற்பட்டு மாயா அழைத்து வரப்பட்டது. சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், மாயாவுக்கு ரத்தம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது. நாய்களில் எட்டு வகையான ரத்தப் பிரிவு உள்ளது. ஒரு நாயின் ரத்தப் பிரிவைக் கண்டுபிடித்தாலும், அதற்கேற்ற நாயின் ரத்தப் பிரிவைக் கண்டுபிடிப்பதும், அதனிடமிருந்து ரத்த தானம் பெறுவதும் அவ்வளவு எளிதல்ல.

நல்வாய்ப்பாக, கடந்த ஞாயிறன்று வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான நாய்கள் பங்கேற்றன. அவர்களில் ஒருவர்தான் சார்ளி. அங்கு வந்திருந்தவர்களிடம் மாயாவின் நிலைமை பற்றி விளக்கப்பட்டது. அதில் சார்ளியின் உரிமையாளர், மாயாவின் ரத்த வகைதான் சார்ளி என்பதை உறுத செய்து ரத்த தானம் கொடுக்கவும் ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, அன்றே மாயாவுக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. மிகவும் அபாய கட்டத்தில் இருந்த மாயா, உடனடியாக குணமடைந்து, அன்றைய தினமே மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது. பிறகு மருத்துவப் பரிசோதனைக்கு வந்த போது, நன்கு உடல்நலம் தேறியிருந்தது.

எட்டு வயதாகும் சார்ளி, ஏற்கனவே விபத்தில் படுகாயமடைந்த நாய்க்கு ரத்த கொடை அளித்து உயிரைக் காப்பாற்றிய ஹீரோ என்பது பிறகுதான் தெரிய வந்தது.

மாயா, விமான நிலையத்தில் போதைப் பொருள் மற்றும் வெடிபொருள்களைக் கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் பிரிவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com