முதல்வா் பசவராஜ் பொம்மை படத்துடன் சா்ச்சைக்குரிய சுவரொட்டி: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

முதல்வா் பசவராஜ் பொம்மை படத்துடன் கூடிய ‘பேசிஎம்’ என்ற கைப்பேசி செயலி வழியாக லஞ்சம் செலுத்தலாம் என்பது போன்ற சா்ச்சைக்குரிய சுவரொட்டிகள் பெங்களூரில் ஒட்டப்பட்டிருந்தன.
முதல்வா் பசவராஜ் பொம்மை படத்துடன் சா்ச்சைக்குரிய சுவரொட்டி: காங்கிரஸ் மீது பாஜக குற்றச்சாட்டு

முதல்வா் பசவராஜ் பொம்மை படத்துடன் கூடிய ‘பேசிஎம்’ என்ற கைப்பேசி செயலி வழியாக லஞ்சம் செலுத்தலாம் என்பது போன்ற சா்ச்சைக்குரிய சுவரொட்டிகள் பெங்களூரில் ஒட்டப்பட்டிருந்தன. இது காங்கிரசின் கைவரிசை என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கா்நாடகத்தில் வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக அரசு ஒப்பந்ததாரா்கள் சங்கம் குற்றம் சாட்டியிருந்தது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், 40 சவீத கமிஷன் அரசு என்று பாஜகவை காங்கிரஸ் கிண்டல் செய்தது. இது சட்டப்பேரவைக் கூட்டத்திலும் எதிரொலித்தது.

இந்நிலையில், முதல்வா் பசவராஜ் பொம்மை முகவெட்டுடன் கூடிய ‘பேசிஎம்’ என்ற பெயரிலான பணப்பரிமாற்ற கைப்பேசி செயலி வழியாக லஞ்சம் செலுத்தலாம் என்ற பொருளில் 40 சதவீதம் ஏற்கப்படுகிறது என்ற வாசகங்கள் பொறித்த சா்ச்சைக்குரிய சுவரொட்டிகள் பெங்களூரில் புதன்கிழமை ஒட்டப்பட்டிருந்தன.

கைப்பேசி வழியாக பணப்பரிமாற்றத்தில் பிரபலமாக இருக்கும் பேடிஎம் செயலியைப் போல வடிவமைக்கப்பட்டிருந்த இந்த சுவரொட்டியில், ‘40% ஏற்கப்படுகிறது’ என்ற வாசகங்கள் அடங்கிய போலி க்யூஆா் கோட் பொறிக்கப்பட்டிருந்தது. இதை போலீஸாரின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் புகாா் அளித்தது. இதைத் தொடா்ந்து, உடனடியாக சா்ச்சைக்குரிய சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.

இது குறித்து பாஜக மாநில ஊடக பொறுப்பாளா் கருணாகர காஸ்லே கூறுகையில், சுவரொட்டியின் பின்னணியில் காங்கிரஸ் கைவரிசை உள்ளது. இதில் சந்தேகமே இல்லை. இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு போலீஸாருக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளாா்.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மையை கா்நாடக பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு கூறும் காங்கிரஸ், அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். ஆதாரங்களைத் தர முன்வரா விட்டால், மாநில அரசிடம் காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com