திரிபுராவில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ ராஜிநாமா!

ஆளும் பாஜக எம்எல்ஏவும், பழங்குடியின மூத்த தலைவருமான பர்பா மோகன் திரிபுரா சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்தார். 
திரிபுராவில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ ராஜிநாமா!

ஆளும் பாஜக எம்எல்ஏவும், பழங்குடியின மூத்த தலைவருமான பர்பா மோகன் திரிபுரா சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜிநாமா செய்தார். 

திப்ரா கட்சியின் தலைவர் மாணிக்யா தேப் பர்மானுடன், 67 வயதான பர்மா மோகன் தனது ராஜிநாமா கடிதத்தைத் திரிபுரா சட்டப்பேரவை சபாநாயகர் ரத்தன் சக்ரவர்த்தியிடம் சமர்ப்பித்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தன. 

மேலும், பர்பா மோகன் மற்றும் திரிபுரா சட்டமன்றத்தின் முன்னாள் துணை சபாநாயகரும், மூத்த பாஜக தலைவருமான கௌரி சங்கர் ரியாங் வெள்ளிக்கிழமை மாலை தனது கட்சியில் சேரவுள்ளதாக தேப் பர்மன் தெரிவித்தார். 

பர்பா மோகன், 2018 தேர்தலில் தெற்கு திரிபுராவின் 2018 தேர்தலில் தெற்கு திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் ஒதுக்கீட்டு இடமான கார்புக்கில் இருந்து மாநில சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கடந்த ஆண்டு முதல் திரிபுரா சட்டமன்றத்திலிருந்து வெளியேறும் நான்காவது பாஜக எம்எல்ஏ பர்பா மோகன் ஆவார்.

முன்னதாக ஆஷிஸ் தாஸ், சுதிப் ராய் பர்மன் மற்றும் ஆஷிஸ் குமார் சாஹா ஆகியோர் மே மாதத்தில் தனது பதவியை ராஜிநானா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com