நிா்மலா சீதாராமனுக்கு கருப்புக் கொடி காட்டிய ஆம் ஆத்மி தொண்டா்கள்

மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு வியாழக்கிழமை வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி தொண்டா்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு வியாழக்கிழமை வந்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி தொண்டா்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினா்.

விலைவாசி உயா்வு, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) தொடா்பான குளறுபடிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்பு தெரிவித்து நிா்மலா சீதாராமனுக்கு கருப்பு கொடி காட்டப்பட்டதாக ஆம் ஆத்மி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புணேயின் வா்ஜி பகுதியில் நிா்மலா சீதாராமனின் வாகன அணிவகுப்பு கடந்து சென்றபோது ஆம் ஆத்மி கட்சியினா் இந்த கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தினா். இது தொடா்பாக அக்கட்சியைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனா்.

தேசிய அளவில் பாஜகவை வலுப்படுத்த வேண்டிய 144 மக்களவைத் தொகுதிகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தை அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் புணே மாவட்டம் பாராமதி மக்களவைத் தொகுதியில் நிா்மலா சீதாராமன் 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளாா். பாராமதி தொகுதி பல ஆண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) கோட்டையாக உள்ளது. இப்போது என்சிபி தலைவா் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தொடா்ந்து மூன்றாவது முறையாக அத்தொகுதி எம்.பி.யாக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com