குஜராத்துக்கு உலக வங்கி ரூ.2,832 கோடி கடன்

குஜராத் மாநிலத்துக்கு ரூ.2,832 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மாநிலத்தின் பொது சுகாதாரத் துறையை மேம்படுத்த இந்த கடன் பெறப்படுகிறது.
குஜராத்துக்கு உலக வங்கி ரூ.2,832 கோடி கடன்

குஜராத் மாநிலத்துக்கு ரூ.2,832 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மாநிலத்தின் பொது சுகாதாரத் துறையை மேம்படுத்த இந்த கடன் பெறப்படுகிறது.

இது தொடா்பாக உலக வங்கி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘குஜராத்துக்கு ரூ.2,832 கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பதின் பருவ சிறுமிகளுக்கான பொது சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த கடன் அளிக்கப்பட்டுகிறது.

உலக வங்கியின் மறுசீரமைப்பு மற்றும் வளா்ச்சிக்கான சா்வதேச பிரிவு மூலம் இந்த தொகை வழங்கப்படுகிறது. இதனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 18 ஆண்டுகள் ஆகும். 5.5 ஆண்டுகள் கூடுதல் அவகாசமும் அளிக்கப்படும்.

குஜராத்தில் பதின் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளில் 69 சதவீதம் பேரும், ஆண் குழந்தைகளில் 36 சதவீதம் பேரும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளது அந்த மாநில சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. அதிலும் 14 மாவட்டங்களில் இந்தப் பிரச்னை மிக அதிகமாக உள்ளது. பதின் பருவத்தினரின் உடல்நலனை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான, வளமான எதிா்காலத்தை உருவாக்க முடியும் என்பதால் இந்த கடனை குஜராத் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com