சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்ட தங்கம்: சுங்கத்துறை பறிமுதல்!

துபாயிலிருந்து கொண்டுவந்த சைக்கிளில் இருக்கைக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதைத் தடுக்க சுங்கத்துறை தனது பிடியைக் கடுமையாக்கிய போதிலும், உலோகத்தை மறைக்கும் புத்திசாலித்தனமான முறையை அதிகாரிகள் சனிக்கிழமை கண்டுபிடித்தனர். 

பயணி ஒருவர் துபாயிலிருந்து கொண்டுவந்த சைக்கிளில் இருக்கைக்கு அடியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சைக்கிள் இருக்கையின் கீழ் உள்ள ஸ்பிரிங்கில் ஒரு கிலோகிராம் எடையுள்ள தங்கம் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுங்கத்துறையினரின் முழுமையான பரிசோதனையின் போது அதைக் கண்டறிந்தனர்.

இந்த கடத்தல் தங்கம் தொடர்பாக எடகுளத்தை சேர்ந்த அப்துல் ஷெரீப் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் தங்கம் கடத்தலுக்கு உதவியதாக இருந்த கண்காணிப்பாளர் உள்பட சில சுங்க அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com