மேகாலயாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 134 பேர் கைது! 

மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேகாலயாவில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 134 பேர் கைது! 

மேகாலயாவில் கடந்த 4 மாதங்களில் ரூ.18 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக 134 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமை இயக்குனர் எல்.ஆர்.பிஷ்னோய் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், 

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களில் 3.62 கிலோ ஹெராயின், 4,500 கிலோ கஞ்சா, 150 பிராம் அபின், 145 இருமல் மருந்துகள் மற்றும் 11,902 ஆம்பெடமைன் மாத்திரைகள் ஆகும். 

இந்தக் காலகட்டத்தில் 31 வாகனங்கள், 90 செல்போன்கள் மற்றும் ரூ.24.22 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கடந்த நான்கு மாதங்களில் (ஜூன் -செப்டம்பர்) ரூ.18.33 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை பறிமுதல் செய்துள்ளோம். 

இதுவரை 48 வழக்குகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், 123 பேர் மேகாலயாவையும், 11 பேர்  அசாம், மணிப்பூர் , அருணாச்சல பிரதேசம் போன்ற பிற மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். 

ஆனால், விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், ஒரு வழக்கில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றார். 

மாநிலத்தின் 12 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் அதிகளவு போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக மேகாலயா காவல்துறை தலைவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com