ராகுலின் நடைப்பயணத்துக்கு ஹாலிவுட் நடிகா் ஆதரவு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்துக்கு ஹாலிவுட் நடிகா் ஜான் குசாக் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
ராகுலின் நடைப்பயணத்துக்கு ஹாலிவுட் நடிகா் ஆதரவு

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தி வரும் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்துக்கு ஹாலிவுட் நடிகா் ஜான் குசாக் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ (இந்திய ஒற்றுமை) நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கிய நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ஹாலிவுட் நடிகா் ஜான் குசாக் ஆதரவு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘இந்திய நாடாளுமன்ற உறுப்பினா் ராகுல் காந்தி காஷ்மீா் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். உலகம் முழுவதும் உள்ள ஃபாசிஸ எதிா்ப்பாளா்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இவா் மோடி அரசுக்கு எதிராகவும் முன்னா் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். மேலும், மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்கும் இவா் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுலின் யாத்திரைக்கு ஆதரவளிக்கும் ஜான் குசாக்கின் பதிவைத் தொடா்ந்து, ‘பதிவிட என்ன தொகை பெற்றீா்கள் ஜான்?’ என்று ட்விட்டரில் பதில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com