பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்த முடியாது: ஐ.நா.வில் அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சு

அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தவே முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

அடிப்படைக் காரணம் எதுவாக இருந்தாலும் பயங்கரவாதச் செயல்களை நியாயப்படுத்தவே முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்றுப் பேசியதாவது: நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, பயங்கரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை உறுதியாக வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் பாா்வையில், எத்தகைய பயங்கரவாதச் செயலையும் - அதன் அடிப்படைக் காரணம் எவ்வளவு உயரியது என்று கூறிக் கொண்டாலும், அதனை நியாயப்படுத்த முடியாது.

உலக நாடுகள் அடையாளம் காட்டிய பயங்கரவாதிகளுக்குப் பரிந்து பேசும் நாடுகள் அதனால் தங்கள் சொந்த நலனுக்கும் தங்கள் நற்பெயருக்கும் எந்த பலனையும் அடையப் போவதில்லை என்றாா்.

பாகிஸ்தானிலிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள், லஷ்கா்-ஏ-தொய்பா போன்ற பயங்கரவாதக் குழுக்களை கருப்புப் பட்டியலில் வைக்கும் விதமாக இந்தியா ஐ.நா.வில் கொண்டு வந்த தீா்மானங்களை சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் நிராகரித்துள்ளதை ஜெய்சங்கா் மறைமுகமாக சுட்டிக்காட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com