தில்லி-சிம்லா விமானச் சேவை: 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்!

ஹிமாசலப் பிரதேச தலைநகருக்கும் புது தில்லிக்கு இடையிலான விமானப் போக்குவரத்து சேவை 2 வருட இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. 
தில்லி-சிம்லா விமானச் சேவை: 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்!

ஹிமாசலப் பிரதேச தலைநகருக்கும் புது தில்லிக்கு இடையிலான விமானப் போக்குவரத்து சேவை 2 வருட இடைவெளிக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது. 

முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஜுப்ர்ஹட்டியில் உள்ள சிம்லா விமான நிலையத்திலிருந்து அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் புதிய ATR-42-600 விமானத்தை கொயைசைத்து தொடங்கிவைத்தார். 

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே. சிங் தில்லியிலிருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் தாக்கூர், 

ஹிமாசலப் பிரதேசம் போன்ற மலைப்பாங்கான மாநிலத்தில் இணைப்பு என்பது பெரிய சவாலாக இருப்பதாகவும், மாநிலத்தில் விமான இணைப்பை அதிகரிக்க மாநில அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொழில்நுட்ப காரணங்களால் சிம்லாவிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக விமானங்கள் இயக்க முடியவில்லை. மாநில அரசின் முயற்சிகள் மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆதரவுடன், சிம்லா - தில்லி இடையே அலையன்ஸ் ஏர் விமானங்கள் வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும்.

அலையன்ஸ் ஏரின் ஏடிஆர்-42-600 விமானம் தில்லியிலிருந்து சிம்லாவுக்கு 48 பயணிகளை ஏற்றிச் செல்லும் என்றும், சிம்லாவிலிருந்து தில்லிக்கு அதிகபட்சமாக 24 பேர் பயணிக்கலாம் என்றும் முதல்வர் கூறினார். 

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய "உடான்" திட்டத்தின் கீழ் இந்த விமானங்கள் 50 சதவீத இருக்கைகளுக்கு ரூ.2,480 மானியம் வழங்கப்படும். மேலும் மற்ற இருக்கைகளுக்கான கட்டணத்தை அந்த நிறுவனமே நிர்ணயிக்கும். 

பிரதமர் மோடி, மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோருக்கு நன்றி. சிம்லாவிலிருந்து பெரிய விமானங்களுடன் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கும், சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் இது உதவும் என்று முதல்வர் கூறினார். 

தில்லி-சிம்லா வழித்தடத்தில் அலையன்ஸ் ஏர் நிறுவனம் சார்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. ஏர் இந்தியாவின் கிளை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் விமான ஒப்பந்தம் 2 ஆண்டுகளில் முடிந்ததால் கடந்த 2020-ம் ஆண்டு முதல் விமானச் சேவை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com