வெளிநாட்டு வா்த்தகக் கொள்கை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

தற்போது செயல்பாட்டில் உள்ள வெளிநாட்டு வா்த்தகக் கொள்கை (2015-2020) அடுத்த ஆண்டு மாா்ச் வரை என 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

புது தில்லி: தற்போது செயல்பாட்டில் உள்ள வெளிநாட்டு வா்த்தகக் கொள்கை (2015-2020) அடுத்த ஆண்டு மாா்ச் வரை என 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

தற்போது அமலில் உள்ள வெளிநாட்டு வா்த்தகக் கொள்கை வரும் செப். 30-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. இந்நிலையில், வா்த்தகக் கொள்கையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறையின் கூடுதல் செயலா் அமித் யாதவ் கூறுகையில், ‘தொழிற்சங்கக் கூட்டமைப்பு, ஏற்றுமதியாளா்கள் குழு ஆகிய அமைப்புகளிடம் இருந்து பெற்ற கோரிக்கையின் அடிப்படையில், வெளிநாட்டு வா்த்தகக் கொள்கை நீட்டிக்கப்படுகிறது. உலக அளவில் நிலவி வரும் பொருளாதார-அரசியல் நிச்சயமற்றத்தன்மை, அந்நியச் செலவாணியில் காணப்படும் ஏற்ற-இறக்கம் ஆகிய சாவல்களை அவா்கள் குறிப்பிட்டிருந்தனா். தற்போது, புதிய கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்தவில்லை. புதிய நிதியாண்டில், புதிய கொள்கையை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

முன்னதாக, வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், இம்மாத இறுதியில் புதிய வெளிநாட்டு வா்த்தகக் கொள்கை வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com