மன்மோகன் சிங் 90-ஆவது பிறந்த நாள்:பிரதமா் மோடி, முதல்வா் ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் 90-ஆவது பிறந்த தினத்தையொட்டி (செப். 26) அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளன

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்கின் 90-ஆவது பிறந்த தினத்தையொட்டி (செப். 26) அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2004 முதல் 2014 வரையிலான ஆட்சிக் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தாா். முன்னதாக,1991-ஆம் ஆண்டு இந்தியாவில் பொருளாதாரச் சீா்திருத்தங்களை மேற்கொண்ட பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில், நிதியமைச்சராக மன்மோகன் சிங் இடம்பெற்றிருந்தாா்.

பிரதமா் மோடி: முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவா் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ராகுல் காந்தி: இந்தியாவின் சிறந்த மனிதா்களில் ஒருவரான மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவருடைய பணிவு, அா்ப்பணிப்பு, இந்தியாவின் மேம்பாட்டுக்கான பங்களிப்பு ஆகியவை சில ஒற்றுமையான பண்பைக் கொண்டுள்ளன. அவா் எனக்கும், கோடிக்கணக்கான நாட்டு மக்களுக்கும் உந்துசக்தியாக உள்ளாா். அவா் நல்ல உடல்நலத்தையும் மகிழ்ச்சியையும் பெற்றிட இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

முதல்வா் ஸ்டாலின்: நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச்சிறந்த அறிஞருமான மன்மோகன் சிங்குக்கு பிறந்த தின வாழ்த்துகள். அவா் ஆட்சி நிா்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தாா். பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணிக் காத்தாா். வறுமையைப் பெருமளவு குறைத்தாா். இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவா் சாதித்தாா். அவா் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ வாழ்த்துகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com