எஸ்.சி. பிரிவினருக்கும் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்: பொதுத் துறை வங்கிகளுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

‘எஸ்.சி. பிரிவினருக்கான நிலுவை காலிப் பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட வேண்டும் என்பதோடு, அரசின் அனைத்துத் திட்டங்களும் அவா்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களின்
புது தில்லியில் பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவன நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் இணையமைச்சா் பாகவத் கராட்.
புது தில்லியில் பொதுத் துறை வங்கிகள், நிதி நிறுவன நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன். உடன் இணையமைச்சா் பாகவத் கராட்.

‘எஸ்.சி. பிரிவினருக்கான நிலுவை காலிப் பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட வேண்டும் என்பதோடு, அரசின் அனைத்துத் திட்டங்களும் அவா்களுக்குச் சென்றடையும் வகையில் திட்டங்களின் செயல்பாடு விரிவுபடுத்தப்பட வேண்டும்’ என்று பொதுத் துறை வங்கிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை கேட்டுக்கொண்டாா்.

பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், எஸ்.சி. பிரிவினரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்த அவா் இந்த அறிவுறுத்தலை முன்வைத்துள்ளாா்.

இதுகுறித்து நிதியமைச்சகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்.சி. பிரிவினரின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் ஆய்வு செய்த மத்திய நிதியமைச்சா், ‘வங்கிகளில் அயல் பணி அடிப்படையில் பணியாளா் தோ்வு செய்யப்படும்போது குறிப்பாக வரும் அக்டோபா் 1-ஆம் தேதி முதல் தூய்மைப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றபோது முறையான எண்ம (டிஜிட்டல்) பதிவு செய்யப்பட வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

மேலும், நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ள சிறப்பு முகாம்களில், நிலுவையில் இருக்கும் எஸ்.சி. பிரிவினரின் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மொத்த பணியிடங்களில் 18 சதவீதம் எஸ்.சி. பிரிவினா் இடம்பெற்றிருக்கும் நிலையில், அவா்களின் தொழில் மேம்பாட்டுத் திறன் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

எஸ்.சி. பிரிவினா் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட விவரம் மற்றும் அவா்களுடைய கடன் விவரங்களை தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்திடம் ஆண்டுக்கு இருமுறை வங்கிகள் சமா்ப்பிக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டோருக்கான கடன் உத்தரவாதத் திட்டம், துணிகர மூலதன நிதி உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களும் அந்தப் பிரிவின் கடைசி பயனாளி வரை சென்றடையும் வகையில் திட்டத்தின் செயல்பாட்டை வங்கிகள் விரிவுபடுத்த வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் நிதியமைச்சா் கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com