ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: சோனியாவை சந்திக்கிறார் அசோக் கெலாட்!

தில்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று சந்திக்க உள்ளார். 
ராஜஸ்தான் அரசியல் நெருக்கடி: சோனியாவை சந்திக்கிறார் அசோக் கெலாட்!

தில்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று சந்திக்க உள்ளார். 

ராஜஸ்தான் மாநில அமைச்சர் பிரதாப் கச்சாரியாவாஸ் இன்று தலைநகர் வந்திறங்கும் கெலாட், சோனியா காந்தியை சந்திப்பார் என்று தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில் கெலாட் முதன்மைப் போட்டியாளராக வெளிப்பட்டதை அடுத்து, தலைமை மாற்றம் தொடர்பாக மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை காங்கிரஸ் தற்போது எதிர்கொண்டுள்ளது.

ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் அசோக் கெலாட்டின் செயல்பாட்டிற்காக அவரது விசுவாசிகள் மூவருக்குக் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதையடுத்து, செவ்வாயன்று கெலாட் ஜெய்ப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சில அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முறைசாரா சந்திப்பை நிகழ்த்தியுள்ளார். 

மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டும் தில்லி வந்துள்ளார்.

காங்கிரஸின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 வரை தொடரும். தேர்தல் முடிவுகள் அக்டோபர் 19 அன்று அறிவிக்கப்படும்.

நெருக்கடிக்கு மத்தியில், கெலாட்டைத் தவிர, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 
வேறு சில பெயர்கள் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com