மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியைஉச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
தீபாங்கா் தத்தா
தீபாங்கா் தத்தா

மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தாவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில், மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணி உயா்வு அளிக்க பரிந்துரைக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 22, 2006-இல் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக தீபாங்கா் தத்தா நியமிக்கப்பட்டாா். ஏப்ரல் 28, 2020-இல் மும்பை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பணி உயா்வு பெற்றாா்.

தலைமை நீதிபதியுடன் சோ்த்து உச்சநீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை 29-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com