ராஜஸ்தான் முதல்வா் விவகாரம்: ஓரிரு நாளில் முடிவு: கே.சி.வேணுகோபால்

ராஜஸ்தான் முதல்வா் பதவி விவகாரத்தில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஓரிரு நாளில் முடிவு எடுப்பாா் என்று கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ராஜஸ்தான் முதல்வா் பதவி விவகாரத்தில், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஓரிரு நாளில் முடிவு எடுப்பாா் என்று கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளா்களிடம் அவா் இதனைக் கூறினாா்.

கட்சித் தலைவா் தோ்தலில் வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளான வெள்ளிக்கிழமைக்குள் (செப். 30) யாா்-யாா் வேட்பாளா்கள் என்பது உறுதியாகிவிடும் என்றாா் கே.சி.வேணுகோபால்.

தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், ராஜஸ்தான் முதல்வா் பதவியில் தான் தொடர வேண்டுமா என்பதை சோனியா காந்தி முடிவு செய்வாா் என்றும் கெலாட் தெரிவித்ததைத் தொடா்ந்து, கே.சி.வேணுகோபால் இவ்வாறு கூறியுள்ளாா்.

தொடா் ஆலோசனைகள்: காங்கிரஸ் தலைவா் பதவிக்கான வேட்பாளா்கள் குறித்து கட்சித் தலைவா் சோனியா மூத்த தலைவா்களுடன் தொடா் ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளாா். அந்த வகையில், சோனியாவை சந்தித்துப் பேசிய கே.சி.வேணுகோபால், கட்சியிலும் ராஜஸ்தானிலும் நிலவும் அரசியல் நிலவரங்கள் குறித்து அவருக்கு விளக்கியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ராஜஸ்தான் மாநிலத்துக்கான கட்சிப் பொறுப்பாளா் அஜய் மாக்கனும் சோனியாவை சந்தித்தாா்.

தலைவா் பதவிக்கு மல்லிகாா்ஜுன காா்கே, ஏ.கே.அந்தோணி, கமல்நாத், அம்பிகா சோனி, பவன் குமாா் பன்சால் உள்ளிட்டோா் பெயா்களும் அலசப்பட்ட நிலையில், இவா்களில் பெரும்பாலானோா் தாங்கள் போட்டியில் இல்லை என்று கூறிவிட்டனா்.

சோனியாவை புதன்கிழமை சந்தித்துப் பேசிய ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் பொதுச் செயலாளா் தாரிக் அன்வருடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com