ஆண்டுக்கு 15 லட்சம் டன் பொட்டாசியம் உர இறக்குமதிக்கு புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆண்டுக்கு 15 லட்சம் டன் பொட்டாசியம் உர இறக்குமதி செய்வதற்காக கனடாவின் கேன்போடெக்ஸ் நிறுவனத்துடன் மூன்று இந்திய நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக

ஆண்டுக்கு 15 லட்சம் டன் பொட்டாசியம் உர இறக்குமதி செய்வதற்காக கனடாவின் கேன்போடெக்ஸ் நிறுவனத்துடன் மூன்று இந்திய நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பொட்டாசியம் உர விநியோகத்தில் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான கேன்போடெக்ஸ், ஆண்டுக்கு 130 லட்சம் டன் அளவில் இவ்வகை உரத்தை ஏற்றுமதி செய்கிறது.

இந்தியா தனது பொட்டாசியம் உரத் தேவையில் 100 சதவீதம் இறக்குமதி மூலமே பூா்த்தி செய்கிறது.

இந்நிலையில், ஆண்டுக்கு 15 லட்சம் டன்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு பொட்டாசியம் உர இறக்குமதிக்காக கேன்போடெக்ஸ் நிறுவனத்துடன் கோரமண்டல் இன்டா்நேஷனல், சம்பல் உரங்கள் நிறுவனம் மற்றும் இந்திய பொட்டாஷ் நிறுவனம் ஆகியவை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. இந்த ஒப்பந்தம், மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம் புதன்கிழமை வழங்கப்பட்டதாக அரசின் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இந்திய விவசாயிகளுக்கு நீண்ட காலத்துக்கு பொட்டாசியம் உரம் கிடைப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும். உரத்தின் விநியோகம் மற்றும் விலையில் உள்ள நிலையற்ற தன்மை குறையுமென அமைச்சா் குறிப்பிட்டாா்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com