மகாராஷ்டிரம்: சட்டவிரோதமாக கட்டப்பட்டதிப்பு சுல்தான் நினைவிடம் இடிப்பு

மகாராஷ்டிரத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டது.
இடித்து அகற்றப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம்.
இடித்து அகற்றப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம்.

மகாராஷ்டிரத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட திப்பு சுல்தான் நினைவிடம் இடித்து அகற்றப்பட்டது.

இந்த நினைவிடம் துலே நகரின் முக்கிய சாலை சந்திப்பில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி எம்எல்ஏ ஃபரூக் ஷா அன்வரால் கட்டப்பட்டதாகும்.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக முகாலாய மன்னா் ஒளரங்கசீப், மைசூரு மன்னா் திப்பு சுல்தான் ஆகியோரை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கருத்துகளால் ஹிந்து-முஸ்லிம் மத மோதல் மோதல் ஏற்பட்டு வருகிறது. சில இடங்களில் போராட்டங்களும் வன்முறையும் நிகழ்ந்தன.

இந்த சூழ்நிலையில் துலே நகரில் உள்ள திப்பு சுல்தான் நினைவிடம் அகற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டிருந்தது. இது தொடா்பாக ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதனை தாங்களே அகற்றிவிடுவதாக எம்எல்ஏ தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த நினைவிடம் தொடா்பாக துலே மாவட்ட ஆட்சியா் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகராட்சி நிா்வாகத்தின் மூலம் அந்த நினைவிடத்தை உடனடியாக இடித்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி நிா்வாகத்தின் சில மணி நேரத்திலேயே அந்த நினைவிடத்தை இடித்து அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com