இந்தியா முழுவதும் 23 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது: அதிகாரிகள்

இணையதளத்தின் உதவியோடு நாடு முழுவதும் கைவிடப்பட்ட 23 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இணையதளத்தின் உதவியோடு நாடு முழுவதும் கைவிடப்பட்ட 23 ஆயிரம் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பால ஸ்வராஜ் என்ற இணையதளத்தின் உதவியோடு குழந்தைகளின் தகவல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட குழந்தைகளின் தகவலைப் பயன்படுத்தி அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களில் முதல் வகை தங்களது குடும்பத்தை விட்டு வெளியேறுவது அல்லது குடும்பத்தினரால் கைவிடப்படுவபவர்கள் ஆவர். அப்படி குடும்பத்தினரால் கைவிடப்படும் குழந்தைகள் வீதிகளில் தங்கும் நிலைக்கு ஆளாகினர். இரண்டாவது வகை தங்களது குடும்பத்தினருடன் வீதிகளில் தங்கியிருக்கும் குழந்தைகள். மூன்றாவது வகை புறநகர் பகுதிகளில் வாழும் குழந்தைகள். இந்த வகை குழந்தைகள் பகலில் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறி விளையாட சென்று பின்னர் இரவு நேரத்தில் வீடு திரும்புபவர்கள்.

வீதிகளில் தங்கியிருக்கும் இந்த 23 ஆயிரம் குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர் தங்களது குடும்பத்தோடு வீதிகளில் தங்கியுள்ளனர். 43 சதவிகிதம் பேர் பகலில் வீதிகளில் விளையாடி இரவு வீடு திரும்புபவர்கள். 4 சதவிகிதம் வீதிகளில் மட்டுமே வசிக்க கூடிய குழந்தைகள் ஆவர். இந்த மூன்று வகைகளில் உள்ள குழந்தைகளுக்கும் வெவ்வேறு விதமான மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com