
புதுதில்லி: இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரஷ்ய துணை பிரதமரும் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாண்டுரோவ் ஆகியோர் இன்று விவாதித்தனர்.
இருதரப்பு முதலீடு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த பரஸ்பர நலன்கள் உள்ள துறைகளில் பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர் என்று நிதி அமைச்சகம் தனது சமீபத்திய ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ஐ.ஆர்.ஐ.ஜி.சி-டெக் அமைப்பின் 24வது அமர்வில் கலந்து கொள்வதற்காக மாண்டுரோவ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள நிலையில், அவருடன் பல ரஷ்ய அமைச்சகங்களின் உள்ள மூத்த பிரதிநிதிகளும் வந்திருந்தனர்.