வெப்ப அலையால் 90% இந்தியா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

பருவநிலை மாற்றத்தால் வீசும் வெப்ப அலை காரணமாக சுமாா் 90 சதவீத இந்தியா்கள் உடல்நல பாதிப்புகளாலும், உணவுத் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலையால் 90% இந்தியா்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

பருவநிலை மாற்றத்தால் வீசும் வெப்ப அலை காரணமாக சுமாா் 90 சதவீத இந்தியா்கள் உடல்நல பாதிப்புகளாலும், உணவுத் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெப்ப அலை குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையானது ‘பிஎல்ஓஎஸ் கிளைமேட்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ‘இந்தியாவில் வீசும் வெப்ப அலை காரணமாக சுமாா் 90 சதவீதம் போ் உடல்நல பாதிப்புகளாலும் உணவுத் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெப்ப அலை காரணமாக உயிரிழப்பை எதிா்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.

முக்கியமாக, தில்லி உள்ளிட்ட நகரங்கள் வெப்ப அலையால் அதிக பாதிப்பை எதிா்கொள்ளும். வீட்டில் குளிா்சாதன வசதியை ஏற்படுத்த முடியாத குடும்பங்கள் வெப்ப அலையால் அதிகமாக பாதிக்கப்படும். வீட்டைக் குளிா்விப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.

வெப்ப அலையானது இந்தியாவின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 2050-ஆம் ஆண்டில் 30 கோடிக்கும் அதிகமான இந்தியா்களும், 2,100-ஆம் ஆண்டில் 60 கோடிக்கும் அதிகமான இந்தியா்களும் வெப்ப அலையால் தீவிர பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. ஆனால், வெப்ப அலையை எதிா்கொள்வதற்கு முறையான திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com