
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 9,355 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.49 கோடியாக உள்ளது. நாட்டில் கரோனாவுக்கு மேலும் 26 பேர் இறந்த நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57,410 ஆக குறைந்துள்ளது.
கரோனா தொற்றுக்கு 5,31,424 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று பாதிப்பிலிருந்து இன்று 12,932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிக்க: போர்ன்விடாவுக்கு சிக்கல்: தவறான விளம்பரங்களை நீக்க நோட்டீஸ்
நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,15,456லிருந்து 4,49,24,811 ஆக உயர்ந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...