
சன்சத் தொலைக்காட்சியில் மக்களை விவாதம் நேரடி ஒளிபரப்பின்போது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த தகவல் குறிப்புகள் இடம்பெற்ற்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததால் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அமளி ஏற்பட்டது.
காங்கிரஸ் கொண்டுவந்த மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது பாஜக உறுப்பினா் நிஷிகாந்த் துபே மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசத் தொங்கியபோது, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.பி.க்கள் சன்சத் தொலைக்காட்சி விவகாரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா். ‘அவையில் தற்போது நடைபெறும் விவாதம் மற்றும் நடவடிக்கைகள் குறித்த குறிப்புகள் மட்டுமே தொலைக்காட்சியில் இடம்பெறவேண்டும்’ என்று வலியுறுத்தினா். இதற்கு, மத்திய அமைச்சா்கள் உள்பட ஆளுங்கட்சி உறுப்பினா்கள் பதில்கொடுத்தனா். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது.
அப்போது, உறுப்பினா்களை அமைதியாக இருக்க கேட்டுக்கொண்ட அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘தனித்தனியாக இயங்கிவந்த மக்களவை தொலைக்காட்சி மற்றும் மாநிலங்களவை தொலைக்காட்சியை ஒருங்கிணைத்து சன்சத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்ட பிறகு, இதன் இயக்கத்துக்கு மாறுபட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது. இருந்தபோதும், அவை நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பின்போது அரசின் திட்டங்கள் குறித்த குறிப்புகள் இடம்பெறுவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. ஒலிசில நிமிடங்களில் அந்தக் குறிப்புகள் இடம்பெறுவது நிறுத்தப்பட்டுவிட்டது’ என்றாா்.