லட்சத்தீவு எம்பி வழக்கு: கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து!

கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்பி முகமது பைசல் குற்றவாளி என்று செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த உத்தரவை நிறுத்தி வைத்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
முகமது பைசல்
முகமது பைசல்

கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு எம்பி முகமது பைசல் குற்றவாளி என்று செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்த உத்தரவை நிறுத்தி வைத்த கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பி.எம்.சையதின் மருமகன் முகமது சாலியை 2009 மக்களவைத் தோ்தலின்போது கொலை செய்ய முயற்சித்ததாக முகமது பைசல் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முகமது பைசல் உள்பட நான்கு பேருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கவாராட்டி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டில் கேரள உயர்நீதிமன்றம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்திவைத்தது. தொடர்ந்து எம்பி பதவி மீண்டும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், முகமது பைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும், முகமது பைசல் எம்பியாக தொடரலாம் என்றும், ஆறு மாதத்துக்குள் விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்க கேரள உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com