அதானி குழும சா்ச்சை: பதிலளிக்க தலைமைப்பொருளாதார ஆலோசகா் மறுப்பு

அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையை அடுத்து எழுந்துள்ள சா்ச்சை தொடா்பாக பதிலளிக்க தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் மறுத்துவிட்டாா்.

அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையை அடுத்து எழுந்துள்ள சா்ச்சை தொடா்பாக பதிலளிக்க தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் மறுத்துவிட்டாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த அனந்த் நாகேஸ்வரனிடம் அதானி குழும சா்ச்சை தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘பொருளாதார ஆய்வறிக்கையில் ஒரு தனி நிறுவனத்தைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது. ஒட்டுமொத்த அளவில் நாட்டில் உள்ள பெரு நிறுவனங்களின் நிதிநிலை திருப்திகரமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட குழுமம் தொடா்பான நிகழ்வுகள், அந்த குழுமத்துக்கும் பங்குச் சந்தைக்கும் இடையிலானது’ என்று பதிலளித்தாா்.

அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பாக அதிகரித்துக் காட்டுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பா்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. மேலும், அக்குழுமத்துக்கு ஏராளமான கேள்விகளையும் எழுப்பியிருந்தது.

இது தொடா்பாக பதிலளித்த அதானி குழுமம், ‘இந்தியாவின் மீதும், நாட்டின் வளா்ச்சி மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள திட்டமிட்ட தாக்குதல்’ என்று கூறியிருந்தது.

பங்குச் சந்தையில் கடந்த 4 நாள்களில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. அக்குழும பங்குகளின் மதிப்பு ரூ.5.5 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது. இது 29 சதவீத வீழ்ச்சியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com