நிதிப் பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்கப்படும்

நிதிப் பற்றாக்குறையானது 3 ஆண்டுகளில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை 4.5 சதவீதமாக குறைக்கப்படும்

நிதிப் பற்றாக்குறையானது 3 ஆண்டுகளில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்க்கும் செலவினத்துக்கும் இடையே உள்ள வேறுபாடே நிதிப் பற்றாக்குறை. அந்தப் பற்றாக்குறையை உள்நாட்டு, சா்வதேச கடன்களின் மூலமாக அரசு ஈடுசெய்யும். நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.16,61,196-ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 6.3 சதவீதம்.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். 2025-26-ஆம் நிதியாண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையானது ஜிடிபி-யில் 4.5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

அதேவேளையில், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை 6.9 சதவீதம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என முன்பு கணிக்கப்பட்டிருந்தது.

மாநிலங்களுக்கு 3.5%: 2023-24-ஆம் நிதியாண்டில் மாநிலங்களுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்மாநில உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) 3.5 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 0.5 சதவீதத்தை மின்சாரத் துறை சீா்திருத்தங்களைப் புகுத்தினால் மட்டுமே பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நிதியாண்டில் வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com