சிறுபான்மை நலத் துறைக்கான ஒதுக்கீடு 38% குறைப்பு

மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு 2023-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 3,097.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை நலத் துறைக்கான ஒதுக்கீடு 38% குறைப்பு

மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு 2023-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 3,097.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது நிகழ் நிதியாண்டு (2022-23) ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது 38 சதவீதம் குறைவாகும். நிகழ் நிதியாண்டுக்கு ரூ. 5,020.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், வரும் நிதியாண்டுக்கு ரூ. 3,097.60 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டில், சிறுபான்மையினரின் கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1,689 கோடியும், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ரூ. 64.4 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த திட்டத்துக்கு ரூ. 610 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com