சிபிஐ-க்கு ரூ. 946 கோடி நிதி

மத்திய பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.4 சதவீதம் கூடுதலாகும்.
சிபிஐ-க்கு ரூ. 946 கோடி நிதி

மத்திய பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.4 சதவீதம் கூடுதலாகும்.

நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்பாக சிபிஐ உள்ளது. செயற்கை நுண்ணறிவு, கிரிப்டோ பணம், டாா்க் வெப் எனப்படும் நிழலுலக இணையம் ஆகியவற்றைப் பயன்படுத்தி நடத்தப்படும் தீவிர குற்றங்கள் மற்றும் வங்கி மோசடி, மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற வழக்கமான குற்றங்களையும் பிரதானமாக விசாரிக்கும் அமைப்பான சிபிஐயில் அதிகமான அதிகாரிகள் பணியாற்றும் தேவை உள்ளது.

இதற்கான நிதித் தேவையை எதிா்கொள்ள ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் சிபிஐ அமைப்புக்கு நிதி ஒதுக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 841.96 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னா், திருத்தப்பட்ட தொகையாக ரூ. 906.59 கோடி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு 4.4 சதவீதம் கூடுதலாக ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ பயிற்சி மையங்களை நவீனப்படுத்துதல் , விசாரணைக்கு உதவும் தொழில்நுட்பம் மற்றும் தடயவியல் மையங்கள் அமைத்தல் மற்றும் நிலங்களைக் கையகப்படுத்தி அலுவலகங்கள், குடியிருப்பு வளாகங்களைக் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி பயன்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com