கேரளத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 113 பேர் கைது!

கேரளத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 113 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 
கேரளத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 113 பேர் கைது!

கேரளத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 113 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். 

கேரள சமூக விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்காக இந்த சோதனை நடத்தப்படுகின்றன. 

ஆபரேஷன் ஏஏஜி என்பது சமூக விரோதிகளுக்கு எதிரான 360 டிகிரி நடவடிக்கையாகும். பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள் 113 பேரை ஞாயிறன்று இரவு கைது செய்யப்பட்டதாக திருவனந்தபுரம் காவல்துறை ஆணையர் சிஎச் நாகராஜ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

நேற்றிரவு மாவட்டம் முழுவதும் திடீர் சோதனை நடத்தி, பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நபர்களை கைது செய்துள்ளோம். இவர்களுக்கு மரண தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகள் குறித்து பேசிய அவர், பெண்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக 'பிங்க் ரோந்து' இரவு ரோந்து பணியில் ஈடுபடும். 

திடீர் வாகன சோதனை நடத்தப்படும். போலீசார் மாறு வேடமிட்டு கண்காணிக்கின்றனர். பாலியல் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com