மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

மேற்கு வங்கத்தில் மால்டாவின் குமார்கஞ்ச் ரயில் நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் மீது சமூக விரோதிகள் சிலர் கற்களை வீசி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு!

மேற்கு வங்கத்தில் மால்டாவின் குமார்கஞ்ச் ரயில் நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலின் மீது சமூக விரோதிகள் சிலர் கற்களை வீசி உள்ளனர்.

இதனால், ஹவுரா நோக்கிச் செல்லும் வந்தே பாரத் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 7வது வந்தே பாரத் ரயிலை கடந்த டிச.30 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடக்கிவைத்து 4 நாள்களே ஆன நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தெற்கு வங்காளத்தை வடக்கு வங்காளத்துடன் இணைக்கும் வந்தே பாரத் ரயில் டிசம்பர் 30, 2022 அன்று வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் ஹவுராவிலிருந்து  தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com