ஃபார்முலா உலக சாம்பியன்ஷிப்: இந்தியாவில் முதல்முறையாக டிக்கெட் விற்பனை!

ஹைதராபாத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் ஏபிபி எஃப்ஐஏ ஃபார்முலா இ (ABB FIA Formula E) உலக சாம்பியன்ஷிப் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று (ஜனவரி 4) முதல் துவங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவின் முதல் ஏபிபி எஃப்ஐஏ ஃபார்முலா இ (ABB FIA Formula E) உலக சாம்பியன்ஷிப் பந்தயத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று (ஜனவரி 4) முதல் துவங்கியது.

தெலங்கானா அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் அரவிந்த் குமார் முதல் டிக்கெட்டை முன்பதிவு செய்தார்.

இந்த நிகழ்வில் 3வது தலைமுறைக்கான உலகின் வேகமான, இலகுவான, சக்தி வாய்ந்த மற்றும் திறமையான மின்சார ரேஸ் கார் பிப்ரவரி 11ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

ஏஸ் நெக்ஸ்ட் ஜென் என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் தெலங்கானா அரசாங்கத்துடன் இணைந்து ஃபார்முலா இ பந்தயத்துக்கு அதிகாரப்பூர்வ விளம்பரதாரர் ஆவர்.

22 கார்களுடன் மொத்தம் 11 அணிகள் இந்த பந்தயத்தில் ஈடுபடும். அவற்றில் சில சிறந்த பந்தய நிறுவனங்களும் அடங்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com