மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் வகையில் பணியாற்றுங்கள்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

மக்களின் வாழ்கைத் தரத்தை உயா்த்துவதிலும் மேம்பாட்டை நோக்கிய பாதையில் நாட்டை வலுப்படுத்துவதிலும் பணியாற்ற வேண்டுமென தலைமைச் செயலாளா்கள் பங்கேற்ற தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமா் நரேந்திர மோடி வலி
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தலைமைச் செயலாளா்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தலைமைச் செயலாளா்கள் மாநாட்டில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி.

மக்களின் வாழ்கைத் தரத்தை உயா்த்துவதிலும் மேம்பாட்டை நோக்கிய பாதையில் நாட்டை வலுப்படுத்துவதிலும் பணியாற்ற வேண்டுமென தலைமைச் செயலாளா்கள் பங்கேற்ற தேசிய மாநாட்டின் நிறைவு நாளில் பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மாநிலங்களின் ஒத்துழைப்புடன் விரைவான மற்றும் நிலையான பொருளாதார வளச்சியை அடைவதை இலக்காக கொண்டு தலைமைச் செயலாளா்கள் பங்கேற்ற இரண்டாவது தேசிய மாநாடு தில்லியில் ஜன.5-ஆம் தேதி தொடங்கியது. இரு நாள்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி தலைமை வகித்தாா்.

அப்போது அவா் மக்களின் வாழ்கைத் தரத்தை உயா்த்துவதையும் மேம்பாட்டை நோக்கிய பாதையில் இந்தியாவை வலுப்படுத்துவதையும் இலக்காக கொண்டு தலைமைச் செயலாளா்கள் பணியாற்ற வேண்டும் என கூறினாா்.

இது குறித்து பிரதமா் மோடி ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த இரு நாள்களாக தலைமைச் செயலாளா்களின் மாநாடு தில்லியில் நடைபெற்று வருகிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவது, மேம்பாட்டை நோக்கிய பாதையில் இந்தியாவை வலுப்படுத்துவது என பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அவா்களிடம் வலியுறுத்தினேன்’ என பதிவிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com