கரோனாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி மூன்று வாரங்கள்: எப்படி இருக்கிறோம்?

சீனத்தில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்தியாவிலும் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
கரோனாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி மூன்று வாரங்கள்: எப்படி இருக்கிறோம்?
கரோனாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி மூன்று வாரங்கள்: எப்படி இருக்கிறோம்?


புது தில்லி: சீனத்தில் கரோனா பரவல் அதிகரித்த நிலையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, இந்தியாவிலும் கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் வருவதாலும், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்திருப்பதாலும், சர்வதேச விமானப் பயணிகளுக்கு ரேண்டம் கரோனா பரிசோதனை, கரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது என பல்வேறு கட்டுப்பாடுகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டன.

சீனாவில் அதிக்கம் செலுத்தி வரும் கரோனா வைரஸ் திரிபுகள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இந்தியாவில் பரவி வந்தாலும், அதனால் இதுவரை பெரிய அளவில் தாக்கம் இல்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.

எனினும், கரோனா உறுதி செய்யப்படுவர்களில் குறிப்பிட்ட சில மாதிரிகள் மரபணு ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, திரிபு கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

எப்படியாகினும், இந்தியாவிலும் கரோனாவுக்கு எதிரான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. தற்போது, நாட்டில் இந்த வாரத்தில் 1,268 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த வாரம் பதிவான 1,526ஐக் காட்டிலும் குறைவாகும். கடந்த 6 வாரங்களாக வாரந்தோறும் பதிவாகும் கரோனா 2,000க்கும் குறைவாகவே உள்ளது. கடந்த வாரத்தைக் காட்டிலும் கர்நாடகத்தில் மட்டும் கரோனா தொற்று இரண்டு மடங்காகியிருக்கிறது.

இந்த வாரம் 12 பேர் கரோனாவுக்கு பலியாகினர். கடந்த வாரம் இது 6 ஆக இருந்தது. நவம்பர் மாதத்திலிருந்து ஒரு வாரத்துக்கு ஏற்படும் கரோனா பலி 50க்குள் பதிவாகி வருகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் நாட்டில் கரோனா பாதிப்பு கடுமையாக அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com