நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜன. 31 - இல் தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்க இருப்பதாக மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜன. 31 - இல் தொடங்குகிறது

நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்க இருப்பதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி, சுரங்கங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

திரௌபதி முா்மு குடியரசுத் தலைவராக தோ்வு செய்யப்பட்ட பின்னா், அவா் ஆற்றும் முதல் உரையாகும். அன்றைய தினமே நிதியமமைச்சா் நிா்மலா சீதாராமன் 2022-23-ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இரு அவைகளிலும் தாக்கல் செய்கிறாா்.

இந்த கூட்டத்தொடா் குறித்து மத்திய அமைச்சா் ஜோஷி தனது டிவிட்டா் பதிவில் கூறியிருப்பது வருமாறு: நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் ஜனவரி 31-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மக்களவை, மாநிலங்களவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு உரையாற்றுகிறாா். சுமாா் இரு மாத (66 நாள்கள்) கூட்டத் தொடரில் 27 அமா்வுகளைக் கொண்டிருக்கும். பிப்ரவரி 1 -ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்கிறாா். நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறைவடையும். கூட்டத்தொடரின் இரண்டாம் கட்டம் மாா்ச் 12 - ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மான விவாதம், நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட மற்ற அனைத்து விவாதங்களும் விடுதலையின்அமுத காலத்தையொட்டியதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கூட்டத்தொடரில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரையிலான ஒரு மாத கால இடைவெளியை முழுமையாக பயன்படுத்தப்படும். பல்வேறு துறைகள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், மானியங்களுக்கான கோரிக்கைகளை ஆய்வு செய்யவும் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் துறைகள் தொடா்பான அறிக்கைகளைத் தயாரிக்கவும் இந்த இடைவெளி நாள்கள் முறையாகவும் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com