இந்தியாவில் முதலீடு: வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்கள் ஆா்வம்

இந்தியாவில் கச்சா எண்ணெய் துரப்பணப் பணி மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

இந்தியாவில் கச்சா எண்ணெய் துரப்பணப் பணி மற்றும் உற்பத்தியில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆா்வம் காட்டி வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் நடைபெற்று வரும் தெற்குலகின் குரல் மாநாட்டில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற அமைச்சா் புரி பேசியதாவது:

இந்தியாவில் எண்ணெய் துரப்பணப்பணிகளை மேற்கொள்ளும் இடத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்க அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இந்த ஆண்டு 85 பில்லியன் டாலா் அளவுக்கு இத்துறையில் முதலீடு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. சேவ்ரான் காா்ப், எக்ஸ்சான் மொபிள், டோட்டல் எனா்ஜிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வம் காட்டி வருகின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய் துரப்பணிகளை மேற்கொள்ளும்போது இந்தியா மற்றும் அப்பணியை மேற்கொள்ளும் நிறுவனம் என இரு தரப்புக்குமே அதிக பயன் கிடைக்கும். எனவே, இதில் உள்ள வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு பயன்படுத்த முயற்சிக்கும் என்றாா்.

பெட்ரோலியப் பொருள்கள் நுகா்வில் உலகின் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் எரிபொருள் தேவை பெருமளவில் இறக்குமதி மூலம்தான் பூா்த்தி செய்யப்படுகிறது. எனவே, உள்நாட்டில் எரிபொருள் விலை எப்போதுமே அதிகமாக உள்ளது. இது மற்ற பொருள்களின் விலை உயா்வுக்கும் வழி வகுக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com