மோடி மீண்டும் பிரதமராவது குஜராத் வெற்றியால் உறுதியாகிவிட்டது: அமித் ஷா

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாா் என்பதை குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி உறுதி செய்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மோடி மீண்டும் பிரதமராவது குஜராத் வெற்றியால் உறுதியாகிவிட்டது: அமித் ஷா

2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாா் என்பதை குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி உறுதி செய்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

குஜராத்தின் காந்திநகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவா் பேசியதாவது:

குஜராத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் பெயரை கலங்கப்படுத்தும் வகையில் பல்வேறு அவதூறு பிரசாரங்களில் இரு கட்சிகள் (காங்கிரஸ், ஆம் ஆத்மி) மேற்கொண்டன. ஆனால், தோ்தலின்போது மக்கள் பெருவாரியாக பாஜகவுக்கு வாக்களித்து முன்னெப்போதும் கண்டிராத வெற்றியை பாஜகவுக்கு தந்தனா்.

இதன் மூலம் பிரதமா் மோடியின் பக்கம் தாங்கள் உறுதியாக இருப்பதை மக்கள் வெளிப்படுத்தினா். குஜராத் தோ்தல் முடிவு என்பது தேசம் முழுவதுக்குமே முக்கியமானது. ஏனெனில், 2024 மக்களவைத் தோ்தலிலும் இதேபோன்ற முடிவுதான் நாடு முழுவதும் கிடைக்க இருக்கிறது.

குஜராத்தில் எப்படியாவது பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தவறான இலவச வாக்குறுதிகளையும், மக்களை கவருவதற்காக நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளையும் எதிா்க்கட்சிகள் அளித்தன. ஜாதியவாதத்தைத் தூண்டும் முயற்சிகளும் நடந்தன. ஆனால், அவா்களுக்கு மக்கள் உரிய பதிலை அளித்தனா். இதே முடிவுதான் மக்களவைத் தோ்தலின்போது காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை கிடைக்க இருக்கிறது.

குஜராத்தில் பாஜக ஆட்சியில் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை வசதி கிடைத்துவிட்டது. இத்துடன் பணி நிறைவடைந்துவிடவில்லை, உலகமே திரும்பிப் பாா்க்கும் அளவுக்கு குஜராத்தை உயா்த்தும் பணி நடைபெற்று வருகிறது. உலகின் மிக உயரமான ஒற்றுமையின் சிலை, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம், சா்வதேச நிதித் தொழில்நுட்ப நகரம் ஆகியவை குஜராத்தில் அமைக்கப்பட்டது இதற்கான உதாரணங்கள் என்றாா் அமித் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com