ராகுலின் நடைப்பயணம் ஹிமாச்சலில் நுழைந்தது: திரளானோர் பங்கேற்பு! 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று(புதன்கிழமை) பஞ்சாபில் இருந்து ஹிமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைந்தது. 
ராகுலின் நடைப்பயணம் ஹிமாச்சலில் நுழைந்தது: திரளானோர் பங்கேற்பு! 

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று(புதன்கிழமை) பஞ்சாபில் இருந்து ஹிமாச்சலப் பிரதேசத்திற்குள் நுழைந்தது. 

வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ல் தொடங்கிய பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இன்று ஹிமாச்சலில் நுழைந்தது.

இந்த அணிவகுப்பு மாநிலத்தின் கட்டோட்டா கிராமத்திற்கு அருகே நுழைந்த பிறகு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வார்ரிங், ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங்கிடம் கொடியை ஒப்படைத்தார். 

பின்னர், மான்சர் கிராமத்தில் அணிவகுப்பில் பங்கேற்ற ராகுல் காந்தியை வரவேற்க மக்கள் திரண்டிருந்தனர். 

மத்திய அரசின் அனைத்துக் கொள்கைகளும், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் விவசாய எதிர்ப்புச் சட்டங்கள் அனைத்தும் பல கோடீஸ்வரர்கள் பயணளிக்கும் நோக்கில் இருந்தன. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று அவர் கூறினார். 

குளிர் காலநிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள், முதல்வர் சுகு, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, மாநிலக் கட்சித் தலைவர் பிரதீபா சிங், மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சி எல்எம்ஏக்கள், இந்தோரா அருகில் உள்ள மான்சர் சுங்கச்சாவடியில் நடைப்பயணத்தை வரவேற்றனர். 

நடைப்பயணத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மட்டுமே பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

இந்த பயணம் வகுப்புவாத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் மோசமான திட்டங்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதை நோக்கமாகக் கொண்டது என்றும் காந்தி கூறினார்.

பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்களையும், நாட்டையும் ஒன்றிணைப்பதே எனது முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com