' தேஜஸ்வி சூர்யா விமானக் கதவை தவறுதலாகத் திறந்துவிட்டார், மன்னிப்பும் கோரினார்'

தேஜஸ்வி சூர்யா, தவறுதலாக அவசரகாலக் கதவை திறந்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்புக் கோரியதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
' தேஜஸ்வி சூர்யா விமானக் கதவை தவறுதலாகத் திறந்துவிட்டார், மன்னிப்பும் கோரினார்'

புது தில்லி: இண்டிகோ விமானத்தில் கடந்த மாதம் பயணித்தபோது பாஜகவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, தவறுதலாக அவசரகாலக் கதவை திறந்ததாகவும், அதற்காக அவர் மன்னிப்புக் கோரியதாகவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

விமானத்தின் அவசரகாலக் கதவை திறந்தது தொடர்பாக தேஜஸ்வி சூர்யா மீது கடும் விமரிசனங்கள் எழுந்த நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதராதித்திய சிந்தியா இன்று இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

டிசம்பர் 10ஆம் தேதி சென்னை - திருச்சி இடையே இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணிகளை ஏற்றும் பணி நடந்து கொண்டிருந்த போது, ஒரு பயணி தவறுதலாக அவசரகாலக் கதவை திறந்துவிட்டதாகவும், அதற்காக அவர் மன்னிப்புக் கோரியிருந்தார் என்றும் விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் நடந்து, அது தொடர்பாக பல விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அவசரகாலக் கதவைத் திறந்தது தேஜஸ்வி சூர்யா என்பதை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் இன்று உறுதி செய்திருக்கிறார்.

இது வேண்டுமென்றே செய்யப்படவில்லை. உண்மை நிலவரத்தைப் பார்க்க வேண்டும். தவறுதலாகவே விமானத்தின் அவசரகாலக் கதவு திறக்கப்பட்டது. பிறகு அனைத்து நடைமுறைகளும் சரிபார்க்கப்பட்ட பின் விமானம் புறப்பட்டது. இதற்காக அவர் மன்னிப்பும் கோரியிருந்தார் என்று சிந்தியா தெரிவித்துள்ளார்.

பொறியாளர்கள் வந்து விமானத்தைப் பரிசோதித்த பிறகே விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும், இதனால், விமானப் பயணிகளுக்கு 2 மணி நேரம் தாமதமானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com