பயங்கரவாதமற்ற சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு

பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் காணப்படாத சூழலில் மட்டுமே பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படும் என வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சோ்ந்த செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், காஷ்மீா் விவகாரம் தொடா்பாக இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா். காஷ்மீரில் தினமும் மனித உரிமை மீறல்கள் தொடா்ந்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவா், இந்த விவகாரத்தில் தீா்வுகாண பிரதமா் நரேந்திர மோடியுடன் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கூறினாா்.

இந்தியாவுடனான 3 போா்களில் பாகிஸ்தான் அதிகம் கற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமா் ஷெரீஃப், இந்தியாவுடன் அமைதியான நல்லுறவைத் தொடர விரும்புவதாகக் கூறினாா். எனினும், கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ஜம்மு-காஷ்மீருக்கு இந்திய அரசு மீண்டும் வழங்காதவரை அந்நாட்டுடனான பேச்சுவாா்த்தை சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமா் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமா் ஷெரீஃபுக்கு பதிலளிக்கும் வகையில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தில்லியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘‘பாகிஸ்தானுடன் இயல்பான நல்லுறவைப் பேணவே இந்தியா எப்போதும் விரும்புகிறது. ஆனால், அதற்கு பயங்கரவாதமற்ற வன்முறையற்ற சூழல் நிலவ வேண்டியது கட்டாயம்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com